உலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை .இந்த பிரபஞ்சம் உருவாக யாரோ ஒருவர் முன்னதாக, ஏதோ ஒன்று வேறொன்றை உருவாக்கும் விதத்தில், இருந்திருக்க வேண்டும்.அது ஒலிவடிவாய் இருந்து பின் ஒளிவடிவாய் ஆயிற்று. ஒளிக்கும் பரிமாணமும், நிறை (கனம்) யும் உண்டென்பதும் விஞ்ஞான உண்மை. ஒவ்வொரு ஒலிக்கும் தனித்தனி உருவமுண்டு. ஒவ்வொரு ஒலிக்கலவைகளுக்கும் தக்கவாறு வானில் பலவித உருவங்களை ஒளி வரைகின்றது. அதனுள் ஒளி ஏற்படுகையில் சக்தி என உயிர் வருகின்றது.அவ்வுயிரின் சக்தி நம் உடலுள் பிரபஞ்ச சக்தி (COSMIC ENERGY) ---யாகப் படருகின்றது. இதைத்தொடர்ந்து நிகழச்செய்வதின் மூலம் உணவின் மூலம் ஏற்படும் சாதாரண வளர்சிதைமாற்றம் (METABOLISM) நிறுத்தப்பட்டு தெய்வீக சக்தி உடலைத் தன் பொறுப்பில் ஏற்கிறது. மூச்சு நிற்கிறது. மன ஆற்றல் என்ற யோக சக்தி இயற்கையை தன்வசப்படுத்துகிறது. இதுவே தியானம் என்ற தவத்தின் ஒரு நிலையாகும். இந்த ஒலி ரூபங்களை (குரல் உருவகங்களை) திருமதி வாட்ஸ் கியுசஸ் ஆராய்ச்சி முடிவை உலகுக்கு தந்தார். எந்த மந்திரத்தையும் ஒலிபேதமின்றி ஒலிச் சிதைவின்றி உச்சரிக்கும்போது அதற்குரிய உருவம் அதனுடைய சக்தியாய் நம்மையடைகின்றது . வேத மந்திரங்களும் - உபதேச விஞ்சைகளும் இத்தகைய அதிர்வலைகளைக் கொண்ட சக்தியாவதே அதன் சிறப்பாகும். எனவே ஜபமும், தவமும் வலுப்பெறுகின்றது.
No comments:
Post a Comment