யோகம் + ஆசனம் பொதுவாக யோகாசனம் என்றாலே உடலை வளைத்து செய்யும் பயிற்சி என்று பெண்களும் , வயதானவர்களில் பெரும்பாலனோர் கருதுகின்றனர்.
யோகத்தின் எட்டு அங்கங்கள் என வர்ணிக்கப்படும்
இயமம்
நியமம்
ஆசனம்
பிராணாயாமம்
பிரத்யாகாரம்
தாரணை
தியானம்
சமாதி
போன்றவற்றில் ஒரு பகுதிதான் ஆசனம். நீண்ட நேர தியானத்திற்கு புலக்கட்டுபாடு, மன ஒருமைப்பாடு தேவைப்படுகிறது.
உடலும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். எனவே சில ஆசன பயிற்சிகளை செய்வதன் மூலம் உடலை நன்றாக வைத்துக்கொள்ள முடியும். நீண்ட நேர தியான பயிற்சிக்கு ஆசனம் உதவுகிறது.
உலகில் 84 இலட்சம் உயிர்வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.ஒரு உயிருக்கு ஒரு ஆசனம் வீதம் 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன என்று யோகிகள் கூறுகின்றனர். இதில 250 ஆசனங்கள் வரை பழக்கத்தில் உள்ளன.
எனினும் இவைகளில்18 வகை ஆசனங்கள் தான் மிகமுக்கியமானவை. இவற்றைப் பயில்வதன் மூலம் ஏனைய ஆசனங்கள் தானாக வந்து விடும். உடல் சிறப்புற சூரிய நமஸ்காரம் என்ற ஆசனத்தில் 10 வகையில் உடல் நிலைகளை வைக்கும் ஆசனங்கள் உள்ளன .
மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தால் வெளியிடப்பட்ட இந்த வலைப்பதிவில் பொதுவாக யோக விஷயங்களையும் உடல் ஆசனங்களை பற்றியும் விளக்கப்டும். மேலும் ஏற்கனவே ஆசனங்கள் பயின்று தொடர முடியாமல் பாதியில் பயிற்சியினை நிறுத்தியவர்களுக்கு இந்த வலைப்பதிவு ஓரளவு நிவாரணம் தரும் என எண்ணுகிறோம் .
யோகம்+ஆசனம் இந்த இரு பயிற்சிகளும் பரந்த கடலுக்கு ஒப்பாகும். இதில் முத்தெடுக்க முனைவோர் தக்க ஆசிரியர் ஒருவரிடம் முறையாக கற்பதனால் உடல் வளமும். மன நலனும் பெற்று இறையருளை அடைவது நிச்சயமே.
சாதகர்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகளை நீக்கிட கேந்திரந்திரத்தினை அணுகலாம்.
வரும் வாரங்களில் யோகத்தின் எட்டு அங்கங்களையும் மற்றும் அவற்றில் பதஞ்சலி மகரிஷி அவர்கள் சூத்திரத்தின் விளக்கங்களையும் பார்ப்போம்.
தியானத்தின் அவசியம் என்ன என்றும் மனிதனின் இந்த உலக வாழ்வில் துன்பங்களை களைய யோகம் எவ்வாறு உதவி செய்கிறது என்றும் காண்போம்.

No comments:
Post a Comment