Many many thanks to the contributors, website administrators, friends etc., for their placement of their views
for the upliftment of mankind in the world

Monday, October 3, 2011

சஹஸ்ராரம் (இறுதிநிலை ஆதாரம்)


மூலாதாரம் முதல் ஆக்ஞை வரை ஆறு சக்கரங்கள் ஆதாரமாய்த் திகழ்கின்ற போது , மூன்று நாடிகளால் இவை ( இடகலை , பிங்கலை, சுழுமுனை)கள் இரண்டிரண்டாய் பின்னப்படுகின்றன. இரண்டு சக்கரங்கள் சேருமிடம் ஒவ்வொன்றும் ஒரு முடிச்சு (கிரந்தி) எனப்படும். மூன்று கண்டங்கள் எனவும் கூறப்படுகின்றது. ஆதாரங்கள் ஆறும் கடந்தால் அங்கிருந்து அதாவது புருவ மத்தியில் இருந்து "பிரம்ம ரந்திரம்" என்ற பகுதி வரை எட்டு பகுதிகள் உள்ளன என்று சித்தர்கள் கூறுகின்றனர். இவைகள் இந்து, ரோதினி , நாதம், நாதாந்தம் , சக்தி , வியாபினி, சுமணி, மனோன்மணி என்ற பெயர்களை உடைய தான எட்டு கலைகளும் இவைகளே. இவ்வாறு ஆறு ஆதாரங்களுக்குப்பின் ஏழாவதாக ஆயிரம் இதழ் தாமரை என்றும் சஹஸ்ராரம் என்றும் கூறப்படும் சிரசின் உச்சி பாகமும், மனித உடலின் தலைக்கு மேல் பரவெளியோடு தொடர்புடையதும் காஸ்மிக் எனர்ஜி எனப்படும் பிரபஞ்ச சக்தியோடு நம்மை இணைக்கும் சஹஸ்ராரம் என்றும் 7வது தளமாகும். யோக வெற்றியினால் வரிசையாக ஆறு ஆதாரங்களைக் கடந்து ஏழாவது ஆதாரமான சஹஸ்ராரம் அடையும்போது மேற் சொன்ன அனைத்து சித்திகளும் பேரானந்த அனுபவமும் கிட்டுமென ரிஷிகள் கூறுகின்றனர். " வாசி" என்ற ஜீவனுக்கு ஆதாரமான உயிர்க்காற்றை இடகலை-பிங்கலை (இடம், வலமாக) ஏற்றி இறக்கி கும்பகம் மற்றும் (அகக்கும்பகம், புறக்கும்பகம்) என்பது போன்ற பல்வேறு பயிற்சிகளை முறையாகச் செய்வதே பிராணாயாமம் எனப்படும் பிராண ஆகுதி ஆகும். இதன் மூலமே கடினமான மற்றும் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வதன் மூலமே பிராணனை உணர்ந்து குண்டலினி சக்தியினை கீழிருந்து மேலேற்றி சஹஸ்ராரத்தை அடைவதற்கான வழிகளின் முதன்மையானதெனக் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment