Many many thanks to the contributors, website administrators, friends etc., for their placement of their views
for the upliftment of mankind in the world

Monday, October 3, 2011

ஸ்ரீ சக்கர விளக்கம் பகுதி - 2

 அன்னை சக்தி

                                                                        
வடிவமைக்கப்பட்ட ஒலியின் சக்தியேற்றிய வார்த்தைகளை துதியாகவும் தோத்திரங்களாகவும் மந்திரம் விஞ்சையென்றெல்லாம் இறையருட் பெற்றவர்களால் உருவகப்பட்ட ஒலிவழி வழிபாடாகும்.

                                  ஓலிக்குரிய தெய்வங்களை  உருவவழியாக  உருவாக்கி உருவவழி பாடாகவும்,    அருஉரு வடிவ வழிபாட்டை வரி(கோடுகளால்) வரிப்படம் என்றும் அதற்கு அப்படியே பிம்பங்கள் என உருக்கொடுத்து சுதகன்(மேரு) எனவும் சக்ர வழிபாடும்  எல்லாவழிபாட்டிற்கும் அர்த்தமுள்ளது எனவும் எல்லா  சக்தியையும் அளிக்கவல்லதும் எல்லாவற்றிற்கும் சக்தியாக இருப்பவளுமாகிய யந்திரரூபியே ஸ்ரீசக்ரநாயகியாம் அம்பிகைச் 'சர்வயந்திராத்மிகாயை' மஹாயந்திரா சக்ரராஜ நிகேதனாய  என்று பல பெயர்கள் உடையவள்


  43 முக்கோணங்களையுடைய சியாமள சக்கரத்தின் சில அம்சங்களையும் பார்ப்போம்.
 இந்த 43 முக்கோணங்களின் உச்சியில் இருப்பது பிந்து ஸ்தானம் அதுவே பராசக்திரத்தியின் உருவம்.இதை  சகஸ்ரதளம் என்றும் யோக சாஸ்திரம் கூறுகிறது.

இதைசசற்றி எட்டு முக்கோணங்களில் கீழ் நோக்கியுள்ள ஐந்தும் சக்திபரம்.
  மேல் நோக்கியுள்ள நான்கும்-சிவபரம் மேருவின் வெளிப்பிரகாரம்25.

மனம் புத்தி சித்தம் அஹங்காரம் ஆகிய தத்துவங்களால்  அமைந்தவை.                                                      

இவற்றில் சியாமளை , வாராகி , விஷ்ணு , ஈசானன் என சகல தேவதைகளும் இருக்கினறனர்.பிந்து(புள்ளி) உள்ள முக்கோணத்திற்கும் சர்வ சித்திப்பிரதம் எனவும்  எட்டு முக்கோணத்தினற்கு சர்வரோஹ ஹரத்துவம் எனவும் பெயர்.

உள்பத்துக்கோணம்-சர்வசாகம் வெளிபத்துக் கோணம்.சர்வார்த்த சாதகம்

அதைச்சுற்றியுள்ள 14 கோணங்களும் சர்வ சௌபாக்கி தாயகம்.

 ஸ்ரீசக்கரத்தில் அடங்கியுள்ள அம்பிகையின்   ஆத்ம சக்திகள்

அன்னையின் இருதயம்   -பராம்பாள்   

புத்தி     -சியாமளை

அகங்காரம் -வாராஹி

புன்சிரிப்பு  -கணபதி


6 ஆதார சக்கரங்கள்-ஷடாம்னாய தேவதைகள்


வளையாட்டு -பாலை

ஆங்குசம்   -சம்பத்கரி

பாசம்     -அச்வாரூடை

இடுப்பு     -  நகுலி

மூலாதாரம் முதல் பிரம்மரந்திரம் வரை தேவதைகள் 36.     
  இவளே பஞ்ச பிராணனாக இருக்கிறாள்.
   


 உடல்   -பிராணண்.
 வாக்கு  -அபாணன்.

 காதுகள்- வியாணன்.

 மனதில் -சமாணன்.

                                                          அகண்டத்தில் -உதாணன்

  எனவாறு விளங்குகிறாள்.துகராசம் என்ற மனத்தில் ஸ்ரீசக்கரத்தையும், பிந்துஸ்தானத்தை அம்பிகையாகவும் வழிபடும் தியானமாகும்.

                                            ஸ்ரீசக்கரவழிபாடு(தியானம்)

ஸ்ரீசக்கரத்திற்கு(உலோகங்களில்) தாமிரம்-செப்புத்தகடு உகந்தது.யந்திரத்தை ஒருநாளும் பூஜைசெய்யாது வைத்திருக்கக் கூடாது.அனுதினம் பூஜை செய்ய வேண்டும்.
 பெரியோர்களையும், தாய்-தந்தையரையும், குலதெய்வத்தையும், வணங்கி இச்சக்கர பூஜையை செய்யலாம்.

தீட்சை பெற வேண்டுமென்பதில்லை. மனம், உடல், சுத்தத்தோடு பூஜையறையில் ஒரு பீடத்திலோ அல்லது படமாக்கி மாட்டிவைத்தோ அம்பாளின் ஸ்லோகங்களை, மந்திரங்களைக் கூறி பூக்களால் அர்ச்சித்து தூப தீபம் காட்டி நிவேதம் செய்து இறுதியாக கற்பூரஹாரத்தி காட்டி வணங்கி வரலாம்.. லலிதாகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் ஏற்றதாகும்.


இந்து மதத்தின் உட்பிரிவுகளுள் எதுவாக இருந்தாலும் சரி,  அவற்றின் வழிபாட்டு முறைகள் யோக தத்துவத்தை நுட்பமாய் விளக்குகின்றன. ஆன்ம லாபத்தை அடையச் செய்யும் பொருட்டு அவைகள் நமக்காக நம் முன்னோர்களால் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு மதக் கண்ணோட்டத்துடனோ , மூட நம்பிக்கை என்றுடனோ பார்க்காமல் அறிவியல் ரீதியாக ஆராய்ந்து பார்த்தால் அதன் உண்மை விளங்கி நம்மை மகிழ்விக்கும்.

No comments:

Post a Comment